"போனே எடுக்கல.. கண்ணுக்கு முன்னாடி துடிக்க துடிக்க செத்தான் அவேன்.." - கண்ணீரோடு கதறும் உறவினர்கள்
மழை நீரில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
சென்னை திருவொற்றியூரில், சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் தேங்கிய மழை நீரில் பூமிக்கடியில் செல்லும்
மின்கம்பி மூலம் மின்சாரம் பரவியுள்ளது. இதனை அறியாமல் அவ்வழியாக டியூசன் முடிந்து சென்ற
17 சிறுவன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். அருகிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மின்வாரியத்தின் அலட்சியமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.