Husband Attack | தாலியை பறித்து வைத்துக் கொண்டு மனைவியை கட்டையால் தாக்கிய கணவன் - பகீர் வீடியோ வைரல்

Update: 2025-06-02 09:32 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் என்ற விவசாயி கருவேப்பிலை பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் அருள்மொழி என்பவரை திருமணம் செய்து ஐந்தாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அருள் மொழிக்கும் அவரது கணவர் குமரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அருகே உள்ள முற்றாம் பட்டு கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியை அருள்மொழி இரண்டு மகன்களுடன் வசித்து வந்த நிலையில் பிரிந்த தனது கணவர் வீட்டில் இருந்து தனக்கான தனக்கு சொந்தமான பொருட்களை எடுப்பதற்காக சென்ற போது அங்கே அந்த பெண்ணை அவரது கணவர் குமரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கழுத்தில் இருந்த தாலியை பறித்துக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்