உறவுக்கு அழைத்த கணவன் - அறியாமல் செய்த தவறால் மனைவி கைது

Update: 2025-07-19 09:51 GMT

கீழே தள்ளி விட்டதால் கணவன் மரணம் - மனைவி கைது

புதுக்கோட்டை அருகே கீழே தள்ளிவிட்டதில் கணவர் உயிரிழந்த சம்பவத்தில் மனைவியை போலீசார் கைது செய்தனர்.பனையப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 16ஆம் தேதி சண்முகநாதன் மது போதையில் வீட்டில் இருந்த தனது மனைவி தனலட்சுமியை உடலுறவுக்கு அழைத்து கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி சண்முகநாதனை தள்ளி விட்டதும், அதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்