சாதாரண வீட்டில் இருப்பவருக்கு இத்தனை லட்சம் கரண்ட் பில்லா? - தூக்கி வாரி போட வைத்த மெசேஜ்
12 லட்சம் கரண்ட் பில் - தூக்கி வாரிப்போட்ட மெசேஜ்
வீட்டிற்கு 12 லட்சம் மின்கட்டணம் என வந்த மெசேஜ் வந்த அதிர்ச்சி சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது. கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வேணு கோபால். இவருக்கு வருகிற 21ம் தேதிக்குள் 1 லட்சத்தி 3 ஆயிரத்தி 923 யூனிட்டுக்கான மின்கட்டணமான 11 லட்சத்து 95 ஆயிரத்து 631 கட்ட வேண்டும் என்று மின் வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே மின்வாரிய அலுவலகஅதிகாரிகளிடம் இதுகுறித்து புகாரளிக்கவே, இந்த பிரச்னையை உடனே சரி செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.