மாணவர்களை கை, கால் அமுக்க சொல்லிய HM - தீயாய் பரவிய வீடியோ..உடனே பாய்ந்த அதிரடி நடவடிக்கை
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை, தனக்கு கை கால் அழுத்த சொன்ன தலைமை ஆசிரியை வீடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மேசையின் மீது படுத்திருக்கும் தலைமை ஆசிரியை கலைவாணியின் கை கால்களை பள்ளி மாணவர்கள் அழுத்த விடும் வீடியோ வெளியானது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கல்வி துறை அதிகாரிகளுக்கு புகாரிளித்து, பள்ளியை முற்றுகையிட்டனர். விசாரணையில், கால்களை அமுக்க சொல்லியதை பெற்றோரிடம் சொல்லக்கூடாது என தலைமையாசிரியர் மிரட்டியதாக கல்வி துறை அதிகாரிகள் நடத்திய விசாரணயில் பள்ளி குழந்தைகள் கூறியதையடுத்து, தலைமையாசிரியர் கலைவாணி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.