இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்ற தினத்தை நினைவுகூர்ந்து ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர். கடந்த வருடம் ஜூன் 29ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா.
ஒருகட்டத்தில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் என்றிருந்த போது பும்ரா BUMRAH, ஹர்திக் பாண்டியா HARDIK PANDYA, அர்ஷ்தீப் சிங் ARSHDEEP SINGH அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
குறிப்பாக, கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசும்போது, சூர்யகுமார் யாதவ் LONG OFF-ல் அபாரமாக கேட்ச் பிடித்து மில்லரை அவுட் செய்தது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நிமிடங்கள்..
இந்த சரித்திர சாதனை படைத்து ஓராண்டு நிறைவடைய, இந்திய அணி வீரர்களும் ரசிகர்களும், டி20 உலகக்கோப்பை ஃபைனல் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.