தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்த மைதீன் என்பவர், வீட்டின் முன்பு இருக்கும் முட்புதரில் 10 அடி நீள மலைபாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் அங்கு பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக மீட்டு கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்வன பகுதியில் பத்திரமாக விட்டுள்ளார்.