சென்னை பார்க்கிங் தியேட்டர் விவகாரத்தில் ஐகோர்ட் எடுத்த முடிவு

Update: 2025-06-20 03:49 GMT

சென்னை விமான நிலைய கார் பார்க்கிங்கில் திரையரங்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை விமான நிலைய கார் பார்க்கிங்கில் அமைந்துள்ள திரையரங்கை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கோரி தனியார் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வரை, திரையரங்கை மூடுவது தொடர்பான விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் திரையரங்கம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, விமான நிலையங்கள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தனியார் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. விமான நிலையங்கள் ஆணையத்தின் தரப்பில், விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகள் அமைக்க அனுமதியில்லை என பதிலளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தனியார் திரையரங்கின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்