திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கூகுள் மேப் உதவியுடன் கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். துறையூர், ஜெம்புநாதபுரம், உப்பிலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் பூட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் தமிழ்பாரதி , சரவணன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிப்பதற்காக கூகுள் மேப் உதவியுடன் கோவில்களை கண்டறிந்தது தெரியவந்தது. கைதானவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.