Gudalur ஹலோ யாரும் இருக்கீங்களா?-போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே சென்று மரண பயத்தை காட்டிய சிறுத்தை

Update: 2025-04-29 10:29 GMT

ஹலோ யாரும் இருக்கீங்களா? - போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே சென்று மரண பயத்தை காட்டிய சிறுத்தை

கூடலூர் அருகே உள்ள காவல் நிலையத்தினுள் சிறுத்தை ஒன்று சாவகாசமாக உலாவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நடுவட்டம் காவல் நிலையத்தினுள் உணவு தேடி சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது பணியில் இருந்த காவலர் முன்னெச்சரிக்கையாக வேறு அறைக்குள் ஒளிந்துள்ளார். இது குறித்த காட்சிகள் காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்