Dharmapuri | நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து, டிராக்டர் - கேட்ட அலறல் சத்தம்.. 10 பேர் நிலை?

Update: 2025-06-23 03:26 GMT

தர்மபுரியில் அரசு பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். தருமபுரியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர், டிராக்டர் ஓட்டுநர் மற்றும் 5 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்