அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? - அமைச்சர் கீதாஜீவன் கொடுத்த ரிப்ளை
தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக திறக்கப்பட்டு, தற்போது 54 ஆயிரத்து 483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறைவான பயனாளிகளுடன் உள்ள இரு மையங்களை இணைக்கவும், தூரத்தில் உள்ள மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே அமைக்கவும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
புள்ளி விவரங்கள் சேகரிப்பு, தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளதால், இந்த மறுசீரமைப்பு இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தற்போது 54 ஆயிரத்து 483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வரும் தருணத்தில் 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.