விழுப்புரம் காளி கோயிலில் குருபூஜை விழா - ஜப்பான் நாட்டினர் சிறப்பு வழிபாடு
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பிரத்தியங்கிரா காளி கோவிலில் உலக நன்மை வேண்டி 30-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டினர் சிறப்பு வழிபாடு செய்தனர். புதுச்சேரி அருகே மொரட்டாண்டியில், 72 அடி உயர சிலை அமைந்துள்ள மகா பிரத்தியங்கிரா காளி கோயில் உள்ளது. இந்த கோயிலின் குரு பூஜை விழாவையொட்டி, ஜப்பான் நாட்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆன்மீக சுற்றுலா பயணிகள், சத்ரு சம்ஹார ஹோமம் செய்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.