திருவள்ளூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை பற்றி துப்புத் துலக்கிட 40 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமியை, ஒரு வடமாநில இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில், குற்றவாளியின் புகைப்படத்தை அச்சிட்டு போலீசார் போஸ்டர் வெளியிட்டு உள்ளனர். மேலும், புறநகர் ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் குற்றவாளி குறித்து கண்காணிப்பதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, 40 போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஷிப்ட் முறையில் தொடர்ந்து இப்பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.