GST | "என்னது எனக்கு ரூ.1.5 கோடி ஜிஎஸ்டியா?" - அதிர்ந்து போன ஏழை முதியவர்
"என்னது எனக்கு ரூ.1.5 கோடி ஜிஎஸ்டியா?" - அதிர்ந்து போன ஏழை முதியவர்
திருப்பத்தூர் மாவட்டம் அருகே 70 வயது முதியவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் மளிகை தோப்பு பகுதியை சேர்ந்தவர் முதியவர் வேலாயுதம் என்பவரது மனைவி உயிரிழந்த விட்ட நிலையில், அவர் பணிபுரிந்து நிறுவனத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற ஓய்வூதிய தொகையை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அத் தொகை கிடைக்கப்பெறாமல், வங்கிக்கு சென்று விசாரித்த போது 1.5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் காவல் நிலையம் சென்று மனு அளித்த அவர், தனது புகாரை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.