குரூப் 2 தேர்வு..! TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | group 2 | TNPSC

Update: 2025-01-30 03:07 GMT

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ நிலையில் உள்ள 5 ஆயிரத்து 200 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த செப்டம்பர் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் தகுதி பெற்ற 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு, பிப்ரவரி மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் இருந்து, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்