``தாத்தா வா தாத்தா ஹாஸ்பிடல் போலாம்..’’ நைசாக கூட்டி சென்று சொத்தை சுருட்டிய கேடி பேரன்

Update: 2025-06-27 05:17 GMT

கிரிமினலாக யோசித்து தாத்தாவின் நிலத்தை பறித்த பேரன்

கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தாத்தாவின் நிலத்தை அபகரித்த பேரனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் வசிப்பவர் குப்பப் பிச்சை. இவரது பேரன் தில்லை குமார், இவரை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, பத்திரப்பதிவு அலுவலகம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சாட்சி கையெழுத்து போட வேண்டும் என ஏமாற்றி, குப்பப் பிச்சைக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்து, பல லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். ஒரு வாரம் கழித்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குப்பப் பிச்சை, இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தன் நிலத்தை தனக்கே மீட்டு தரும்படி அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்