"மவனே கழுத்த ரெண்டா வெட்டிருவேன்..'' - அதிகாரியை பெண் மிரட்டும் ஆடியோ

Update: 2025-03-30 02:47 GMT

சிவகாசியில், குடும்ப அட்டை விண்ணப்பத்தை நிராகரித்த வருவாய் ஆய்வாளரை பெண் ஒருவர் தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவரை பிரிந்து, 2 குழந்தைகளுடன் வசிக்கும் சந்திரலேகா என்பவர், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிருந்தார். அந்த முகவரியில் ஏற்கெனவே வேறு ஒருவருக்கு குடும்ப அட்டை வழங்கபட்டிருந்ததால் சந்திரலேகாவின் விண்ணப்பத்தை வருவாய் ஆய்வாளர் கோட்டையராஜ் நிராகரித்துளார். இதனால் கோபமடைந்த சந்திரலேகா, வருவாய் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்