Gold |Baby | குழந்தையின் தங்க டாலரை திருடிய தந்தையின் நண்பர் - வைரலாகும் வீடியோ
Father's friend steals || குழந்தையின் தங்க டாலரை திருடிய தந்தையின் நண்பர் - வைரலாகும் வீடியோ
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க நகையை, தந்தையின் நண்பரே திருடியது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமாகி உள்ளது. இச் சம்பவத்தில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், தந்தை விமல் பெட்ரோல் பங்கிற்கு சென்ற போது குழந்தை, நண்பர் பாலகிருஷ்ணனிடம் இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர் தங்க டாலரை திருடும் காட்சி பதிவாகி உள்ளது. தற்போது பாலகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.