Zoho Sridhar Vembu | இளைஞர்களின் திருமண வயது - ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
இளைஞர்கள் 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை கூறியுள்ளார்... தான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர்கள்... ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகளை பெற வேண்டும், தள்ளி போடக்கூடாது என அறிவுரை கூறுவதாக தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு, அவர்கள் இந்த சமூகத்திற்கும் தங்கள் மூதாதையர்களுக்கும் மக்கள்தொகை கடமையைச் செய்ய வேண்டும் என்றும், இந்தக் கருத்துக்கள் பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் அவை மீண்டும் எதிரொலிக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.