ATMல் கொள்ளையடித்த கும்பல் - 24 மணி நேரத்தில் தட்டித் தூக்கி மாஸ் காட்டிய விழுப்புரம் போலீஸ்

Update: 2025-06-15 04:51 GMT

விழுப்புரத்தில் கைவரிசை காட்டிய வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் மடக்கி பிடித்த விழுப்புரம் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விழுப்புரம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரும் பகுதியில் அலுமினிய தகடு வைத்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டினர். அதன்படி, கொள்ளையடித்த பணத்துடன் உத்தரப்பிரதேசம் தப்பிய முயன்ற கொள்ளையர்களை விழுப்புரம் போலீசார் 24 மணி நேரத்திற்குள், பெங்களூருவில் வைத்து மடக்கி பிடித்தனர். சோனு, சஞ்சய்குமார், சிவா மற்றும் லவ்குஷ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், 4 செல்போன்கள் மற்றும் 4 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்