ஆபத்தில் முடிந்த அடுத்தவர் மனைவி நட்பு? ஷோ ரூமுக்குள் புகுந்து சரமாரி வெட்டு..
ஷோரூமிற்குள் புகுந்து ஒருவருக்கு அரிவாளால் வெட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எலக்ட்ரிக் பைக் விற்பனை ஷோரூமிற்குள் புகுந்து சேல்ஸ் மேனேஜரை வெட்டிவிட்டு தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சேல்ஸ் மேனேஜர் சதிஷ் குமாரும் அதே ஷோரூமில் வேலை பார்த்து வந்த திருமணமான பெண் ஒருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இதனை அந்தப் பெண்ணின் கணவர் முத்தையா கண்டித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் வேலையை விட்டுச் சென்றும் சதிஷ்குமாருடனான தொடர்பு தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த கணவர் முத்தையா ஷோரூமுக்குள் புகுந்து சதிஷ்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.