Flood | Rain | நிரம்பிய அக்ரஹாரம் ஏரி..வெள்ளக்காடாக மாறிய குடியிருப்பு பகுதிகள்.. பொதுமக்கள் அவதி

Update: 2025-10-14 06:45 GMT

தொடர் கனமழை காரணமாக வேகமாக நிரம்பிய அக்ரஹாரம் ஏரி.. ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

வேலூர் மாவட்டம் குடியாத்தம், தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மோர்தானா அணை தனது முழு கொள் அளவை எட்டிய நிலையில் தற்போது மோர்தானா அணையிலிருந்து உபரிநீராக சுமார் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில்

அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீர் ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டது இதனிடையே சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரஹாரம் ஏறி தனது முழு கொள்ளளவை எட்டியது இதனிடையே ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் குடியாத்தம்- சேம்பள்ளி சாலை மற்றும் மீனூர் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்

மேலும் தண்ணீர் நீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக ஏரியிலிருந்து வரும் உபரி நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

இந்த நிலையில் ஊராட்சி சார்பாக தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்களை சீரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்