Fishing Festival | மத நல்லிணக்கத்துடன் ஊரே இறங்கிய தருணம்..மீன்பிடி திருவிழாவில் கொண்டாட்டம்

Update: 2025-10-02 09:34 GMT

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள கோம்பையன்பட்டியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அணைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த ஆண்டு நீர் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் குளத்தில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன. அந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகியது. தற்போது குளத்தில் நீர் வற்றிய நிலையில், மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை ஊர் பொதுமக்கள் கோம்பையன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்கு வந்தனர். அங்கு பிரார்த்தனை நடந்தது. அதன்பின்பு அங்கு இருந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து குளக்கரையில் அமைந்திருக்கும் கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் கிறிஸ்துவின் சிற்றலையில் பாதிரியார்கள் பிராத்தனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்