தாத்தா மீது அப்பா பாலியல் புகார்..8 வயது பேத்தி தந்த வாக்குமூலத்தால் திருப்பம்

Update: 2025-06-15 02:54 GMT

தந்தை மீது சொந்த மகனே பொய்யான போக்சோ புகார்

சென்னையில், 8 வயது குழந்தைக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தனது தந்தையை பழிவாங்க சொந்த மகனே பொய்யான புகார் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ராயப்பேட்டையில் 8 வயது குழந்தைக்கு தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக, குழந்தையின் தந்தை அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தாத்தா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் குழந்தைக்கு மனநல ஆலோசனை வழங்க உத்தரவிட்டு, மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல அலுவலரிடம் குழந்தையை அழைத்துச் சென்றபோது இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. தனது தாத்தா மீது எந்த தவறும் இல்லை என்றும், தனது தந்தை, தாத்தா மீது புகார் அளித்ததாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். வேலைக்கு செல்லாமல் இருந்ததையும், 70 ஆயிரம் ரூபாய் வாடகைப் பணத்தை தனக்கு தெரியாமல் வாங்கியதாலும், தந்தை, மகனை திட்டிய நிலையில், ஆத்திரத்தில் மகனே பொய்யான பாலியல் புகார் கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, முதியவரை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்