ஒருபக்கம் குறையும் விலைவாசி... இன்னொரு பக்கம் காத்திருக்கும் சவால் - GST 2.O நல்லதா? இல்லையா?
ஒருபக்கம் குறையும் விலைவாசி... இன்னொரு பக்கம் காத்திருக்கும் சவால் - GST 2.O நல்லதா? இல்லையா?
டெல்லில 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்குது. செப் 3 மற்றும் 4 தேதிகள்ள நடக்குர இந்த கூட்டத்துல ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் பத்துன முக்கிய ஆலோசனைகள் நடக்குது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில, மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததா பார்க்கப்படுது. 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்ல இருக்கு. இந்த நிலையில தான் போன ஆகஸ்ட் 15 அன்னைக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துன பிரதமர் மோதி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னாடியே நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி இருக்குன்னு சொன்னாரு. குறிப்பா ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலமா நாட்டு மக்கள் நேரடி நன்மைய பெற போராங்கன்னும் சொன்னாரு. அந்த வகையில இப்ப 5%,12%,18%,28%னு 4 பிரிவுகளா இருக்கர ஜிஎஸ்டி வரிகள் இனி 2 பிரிவுகளா மாற்றப்பட இருக்கு. அதாவது வெறும் 5% மற்றும் 18% தான் வரி பிரிவுகள். அந்த 12%,28% நீக்கப்படுவதுக்கான ஆலோசனைகள் தான் இப்ப டெல்லியில நடக்கு. ஜிஎஸ்டி வரி விகித திருத்த தீர்மானத்துக்கு ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளிச்சிருந்தது. ஒரு வேள ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் அமலுக்கு வரும் பட்சத்துல மக்களோட அன்றாட வாழ்க்கைல பயன்படும் பல பொருட்களோட விலை குறையும். அதுமட்டும் இல்லாம வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள்,ஆடை,வாகன உதிரிபாகங்கள், அழகு சாதனப் பொருட்கள்நு தினசரி தேவைகள் கணிசமா விலை குறையும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தம்னு சொல்லப்படர மத்திய அரசோட இந்த திட்டம் மாநிலங்களுக்கு அவ்வளவு நல்ல செய்தியா இருக்குமாங்கர கேள்வி எழுது. இது போன்ற சீர்திருத்ததால தங்களுக்கு மிகப்பெரிய அளவுல வரி வருவாய் இழப்பு ஏற்படும்னு கவலை தெரிவிக்கராங்க. அதனால தங்களுக்கு வரக்கூடிய வருவாய் இழப்ப சரி செய்ய இழப்பீடு குறித்து மத்திய அரசு உறுதியான உத்தரவாதம் கொடுக்கனும்னு தெரிவிக்கராங்க. அப்படி மாநிலங்களுக்கு இதுனால என்ன பாதிப்பு வரும்னு இப்ப பார்க்கலாம்.