Erode | தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட சடலம் - என்ன காரணம்?

Update: 2025-06-24 06:24 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆட்சேபனைக்குரிய பட்டா நிலத்தில் புதைத்த சடலத்தை கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், தோண்டி எடுத்து பொது மயானத்தில் வருவாய் துறையினர் அடக்கம் செய்தனர்‌. சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த சதாசிவம், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதாசிவத்தின் உறவினர்களான கிரி மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு ஐந்து ஏக்கர் நிலம் பாகப்பிரிவினை செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் உயிரிழந்த சுப்பிரமணியன் மற்றும் கிரி ஆகியோரது தந்தை சின்னத்தம்பியின் சடலத்தை பாகப்பிரிவினை செய்யப்படாத நிலத்தில் நல்லடக்கம் செய்த நிலையில், இதற்கு சதாசிவம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அளித்த புகாரின் பெயரில் வருவாய் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்