பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கலால் துறை அதிகாரி.. அதிரடி காட்டிய போலீஸ்

Update: 2025-03-31 01:43 GMT

பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கலால் துறை அதிகாரியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கலால் துறை மற்றும் மதுவிலக்கு துறையின் கோட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் சித்தராஜ். இவர் கோழிக்கண்டி பகுதியில் உள்ள கிராமத்துக்கு சென்று நாட்டுக்கோழி வாங்கச் சென்ற போது, அப்பகுதியில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் கையைப் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. புகாரை தொடர்ந்து உட்கோட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. . விசாரணையில் புகார் உறுதியான நிலையில் சித்தராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்