ஓட்டு போட சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி... அந்த நபர் யார்..? பரபரத்த ஈரோடு கிழக்கு

Update: 2025-02-05 13:35 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணின் வாக்கு ஏற்கனவே பதிவாகி இருப்பதாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168வது பூத்தில் பரிதாபேகம் என்பவர் கணவருடன் வாக்களிக்க வந்துள்ளார். அவரது கணவர் வாக்களித்த நிலையில், பரிதாபேகம் வாக்கு செலுத்த சென்றபோது அவர் ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில், தனக்கு பதிலாக வேறு யாரோ வாக்களித்து இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்