Erode | ``நீ கேளுயா மொதல்ல.. என் பணம் போச்சு.. பதில் சொல்லு’’ Bankல் கடும் வாக்குவாதம்
ஈரோடு அருகே, வங்கி ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சத்தியமங்கலம் அடுத்த நால்ரோடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல், வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளார். இதில், கடன் தொகைக்கு கூடுதலாக 16 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தெரிவித்த நிலையில், பணத்தை திருப்பி தருவதாக வங்கி ஊழியர் கூறியுள்ளார். இருப்பினும் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.