அந்தியூர் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் அரசு நிலத்தில், கஞ்சா பயிரிட்டு, வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கஞ்சா செடிகளை வளர்த்த அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.