Namakkal Death | சாலையை கடக்க முயன்ற முதியவர் அதிர்ச்சி பலி - சாலையில் இறங்கி உறவினர்கள் ஆவேசம்
சாலையை கடக்க முயன்ற முதியவர் அதிர்ச்சி பலி - சாலையில் இறங்கி உறவினர்கள் ஆவேசம்
விபத்தில் காயமடைந்த முதியவர் தனியார் மருத்துவமனையில் பலி - சாலை மறியல்
நாமக்கல்லில், சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவர் திடீரென உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையை கண்டித்து குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த குமாரசாமி என்பவர் கருங்கல்பாளையம் சாலை பகுதியில் சாலையை கடக்கும்போது கார் மோதியதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மோகனூர் சாலையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், முதியவர் குமாரசாமி திடீரென உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்