EB Bill | ``ரூ.67 ஆயிரம் வந்த கரண்ட் பில்.. போய் கேட்டா திமிரா பேசுறாங்க'' - பேரதிர்ச்சியில் உறைந்த மீனவர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கிராமத்தில் வசித்து வரும் மீனவர் சேக் ஜமாலுதீன். இவர் மீனவர்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த இலவச சுனாமி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இந்த மாத மின்கட்டணம் 67 ஆயிரம் ரூபாய் வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.