தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் - மத்திய அரசு

Update: 2025-06-05 05:25 GMT

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட போலி பயனர் கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் முடக்கி இருந்தது. இதன் ஒருபகுதியாக இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இ-ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது உண்மையான பயனாளர்களுக்கு தேவையான நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்