உயிரை விலையாய் கொடுத்த 2 இளைஞர்கள் - சேலத்தில் பயங்கரம்

Update: 2025-06-09 05:01 GMT

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய இருவர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூரில், சுற்றுலா பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜீவா மற்றும் பாலா. இருவரும் கொளத்தூர் விராலிகாடு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சுற்றுலா பேருந்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இளைஞர்கள் இருவருமே மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்