"ராஜாவாக , ஏழையாக இருந்தாலும் கடைசியில் சாம்பல் தான்" ஆட்சியர் பேச்சால் திகைத்து நின்ற மக்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோப்பம்பட்டி பகுதியில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசு நிலம் என்பது அனைவருக்கும் சமமானது எனக் கூறினார். மேலும், ராஜாவாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் மயானத்திற்கு சென்றால் ஒரு டம்ளர் சாம்பல் தான் எனவும் அவர் தெரிவித்தார்.