திருச்செந்தூர் காவலர் செய்த அசிங்கங்கள்.. பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்த காவலர் மிகாவேல் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் மிகாவேல் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து , கைது செய்யப்பட்ட அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.