#BREAKING || DIG Mahesh Kumar | பாலியல் புகார்.. டிஐஜி வழக்கில் பெரும் திருப்பம்..

Update: 2025-04-14 07:26 GMT

போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்தது மாநில உள்துறை.

சென்னை காவல்துறை போக்குவரத்து பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் மகேஷ் குமார். ஐபிஎஸ் அதிகாரியான இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் காவலர், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். இந்த புகார் விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. இந்தக் குழு விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. புகார்தாரரின் வேண்டுகோளின் படி, பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்