தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் - போலீஸ் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் பிளாஸ்டிக் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் மூலப் பொருட்கள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கின. தகவல் அறிந்த ராமேஸ்வரம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், மெரைன் போலீஸார், மீன்வளத்துறை மற்றும் சுங்கத்துறையினர் கரை ஒதுங்கிய மூட்டைகளை பார்வையிட்டனர். கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மூலம் போதைப்பொருள் தயாரிக்கப்படுமா? கடற்படைக்கு அஞ்சி கடத்தல்காரர்கள் விட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.