ஆற்றில் திடீரென அதிகரித்த நீர்வரத்து - குழந்தைகளை பாத்திரங்களில் வைத்து.. சிக்கித்தவித்த பக்தர்கள்
நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிக்கிக்கொண்டதையடுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழைய பட்டவராயன் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் தாமிரபரணி ஆற்றை கடந்து சென்றனர். கோயில் திருவிழா முடிந்து பக்தர்கள் வெளியேற தொடங்கிய போது, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்தனர். உடனடியாக வனத்துறையினர் கட்டிய கயிற்றை, பக்தர்கள் பிடித்து கொண்டும், குழந்தைகளை பாத்திரங்களில் வைத்தும் பாதுகாப்பாக வெளியேறினர்...