"விளையாட்டில் விடாமுயற்சி ரொம்ப முக்கியம்"
விளையாட்டில் விடாமுயற்சி ரொம்ப முக்கியம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவதாக கூறினார். பள்ளிகளில், பி.டி. P.T. வகுப்புகளை எந்த ஆசிரியர்களும் கடன் வாங்கக் கூடாது எனவும் துணை முதல்வர் அறிவுறுத்தினார்...