கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கரூரில், வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், முடிவுற்ற திட்டங்களின் நிலை குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பணிகளை விரைந்து முடிக்க சில ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.