தாய் துடிதுடிக்க கொடூர கொ*ல...தூ*கு தண்டனை கைதி தஷ்வந்த் விடுதலை-வழக்கில் பகீர் திருப்பம்

Update: 2025-04-29 16:41 GMT

தாய் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதி தஷ்வந்த் விடுதலை

6 வயது குழந்தை சீரழித்து சிதைத்து கொ*ல

பெற்ற தாய் துடிதுடிக்க கொடூர கொ*ல

தூ*கு தண்டனை கைதி தஷ்வந்த் விடுதலை

கடந்த 2017-ல் சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, ஜாமின் பெற்ற தஷ்வந்த் குன்றத்தூரில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில், செலவுக்கு பணம் தராததாக கூறி தாயை கொலை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இருவழக்குகளும் செங்கல்பட்டு மகளிர் மற்றும் முதன்மை நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், தஷ்வந்த் தாயின் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களுக்கு பின் தஷ்வந்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதாலும், போதிய ஆதாரமில்லாததாலும், தஷ்வந்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்