கேரளாவுல சென்னையை சேர்ந்த நபர் உயிரிழந்த விவகாரத்துல, மார்புல உதைத்ததே உயிரிழப்புக்கு காரணம்னு உறவினர்கள் புகார் கொடுத்திருக்காங்க...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள படகு வீட்டில் ஏற்பட்ட தகராறில், சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு இறைச்சி சங்கத் தலைவர் சுல்தான் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
படகு வீட்டின் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட தகராறின் போது, சுல்தான் மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில், மார்பில் உதைத்ததே உயிரிழப்புக்கு காரணம் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், கேரள போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உறவினர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.