சொந்த வீட்டுக்கே `ரூட்’ போட்டு கொடுத்த மருமகள் - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சென்னை, தாம்பரத்தில் படுத்த படுக்கையாக உள்ள மாமியாரின் நகையை திருட மருமகளே பிளான் போட்டு கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த சுப்புலட்சுமி, வயது மூப்பு காரணமாக, படுத்த படுக்கையாக தனது மகன்களுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ம் தேதி சுப்புலட்சுமியை தவிர வீட்டில் உள்ள அனைவரும் உறவினர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது, சுப்புலட்சுமி அணிந்திருந்த நகைகள் காணாமல் போயுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வீட்டுக்குள் ஹெல்மெட் அணிந்தவாறு