வட சென்னையை சுழற்றி போட்ட சூறாவளி - `டார்க் மோடில்’ திகில் காட்டிய வானம்

Update: 2025-05-05 01:58 GMT

வடசென்னை அனல் மின் நிலைய பகுதியில் பலத்த சூறைக்காற்றால் புழுதி எழுந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதையடுத்து, காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, வடசென்னை அனல் மின் நிலையம் அருகே திடீரென சூறாவளி காற்று சுழன்று அடிக்க தொடங்கியது. நிலக்கரி மற்றும் சாம்பல் துகள்களால் புழுதி எழுந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்