Cyber Crime | ``உங்க பேங்க் அக்கவுண்டில் பணம் காணாமல் போனால் உடனே இத பண்ணுங்க'' - போலீஸ் எச்சரிக்கை
சைபர் மோசடி கும்பல் வங்கி பணத்தை கொள்ளையடித்தால் உடனடியாக வங்கி கணக்குகளை முடக்கும் புதிய நடவடிக்கையை அறிமுகம் செய்ய உள்ளதாக சைபர் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கியில் இருந்து திருடப்பட்ட பணம் குறித்து உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு புகார் செய்தாலே வங்கி கணக்குகள் முடக்கப்படும் என தெரிவித்துள்ளனர், மேலும் மோசடி கும்பலுக்கு சிலர் வங்கி கணக்குகளை வாடகை விடுவதாகவும், அவ்வாறு செய்வது கடுமையான குற்றம் எனவும் எச்சரித்துள்ளனர்,