சிறுமி மீது ஏறி இறங்கிய எமன்.. கதறி அழுத குடும்பம் - மனதை நொறுக்கும் காட்சிகள்

Update: 2025-01-29 05:05 GMT

கடலூர் அருகே தண்ணீர் டிராக்டர் மோதி, 4 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூக்கணாம் பாக்கம் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரின் மகளான பிரதிஷா, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி இருப்பதை கவனிக்காமல், பின்னோக்கி இயகப்பட்ட டிராக்டர் பிரதிஷா மீது ஏறி இறங்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அப்போது சிறுமியின் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்