Cuddalore | திடீர் ரெய்டு.. அரசு அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய பணம் - மிரண்டு போன அதிகாரிகள்
கடலூரில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கட்டு கட்டாக 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட அதிகாரிகளை வரவழைத்து கூட்டம் நடத்தி, பணம் வசூல் செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திடீரென மேற்கொண்ட ஆய்வில் , அலுவலக மேஜைக்குள் கட்டு காட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.