Cuddalore | நேருக்கு நேர் வழிமறித்து நின்ற தனியார் பேருந்து அடாவடியில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்
சிதம்பரத்தில் தனியார் பேருந்துகளை எடுக்கும் நேர பிரச்சினையில், அவ்வப்போது சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் தனியார் பேருந்துகளான கனகராஜ் மற்றும் MOH இடையே பேருந்தை எடுக்கும் நேர பிரச்சினையால், ஒரு வழி பாதையில் இரு பேருந்துகளும் எதிரெதிரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்